தனலட்சுமி

(ஏய் தனலட்சுமி! என ஒலித்த திசை நோக்கி திரும்பினேன்)!!

இலவசம் என்பதால் செருப்பை வைப்பதற்கு கூட்டம்...

( தனலட்சுமியை கண்டேன், பின் தொடர்ந்தேன்)!!

சொல்லுங்க உடம்புக்கு என்ன? என மருத்துவர் போல் வினவும் தோரணையில் வீற்றிருந்தார் விநாயகர்..

( தனலட்சுமிஅருகில் நின்றேன்)!!

பெண்களின் வளைவுவளை போல் வளைந்து நின்ற மக்கள் கூட்டம்..

( தனலட்சுமியை ரசித்தேன்)!!

கணினி முன்பதிவு இல்லாததால் வசதி படைத்தவரும் வரிசையில் நின்றனர்..

( தனலட்சுமி திரும்பி பார்த்தாள்)!!

சாம்பிராணி புகையின் பின்னணியில் தோன்றினாள் கற்பகாம்பாள்..

(தனலட்சுமி சோனியா அகர்வாலை போல் சிரித்தாள்)!!

குரு பெயற்சியால், குருவின் அருகே கூட்ட நெரிசல்..

(தனலட்சுமியின் உதடு முணுமுணுத்தது)!!

சிவனிடம் விருப்பத்தை நிறைவெற்ற வேண்டினேன்..

(தனலட்சுமி எனக்கு கை அசைத்தாள்)!!

நானும் அவளுக்கு கை அசைத்து விட்டு கன்னத்தை கிள்ளினேன்..

(தனலட்சுமி அம்மா தோளில் ஏறி வெளியேறினாள்)!!

.." நானும் தொடர்ந்து வெளியேறினேன் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து"..

எழுதியவர் : (19-Oct-16, 1:48 pm)
பார்வை : 73

மேலே