சகாரா சங்கீதமே

சகாரா சங்கீதமே !
வெயிலில் நீ தண்ணீர் சுமந்து வருகையில் ,
என் நிழலும் தாகம் கொள்ளுதடி.......
என் மனமும் சூரியனைக் கொல்லுதடி....பழித்தீர்க்க!!
சகியே!
உன் வியர்வைத் துளிப் புண்ணியத்தால் ,
சுடு மணலும் குழந்தையாய் படிந்து ,தூங்குதடி.....கொழுசொலித் தாலாட்டுக்கேட்டு !
அன்பே !
காமத்தீயை அணைக்க
அற்ப சிறுதுளி நீர் போதும்...
ஆனால்,
எத்திசைகள் அனைத்தும் காதல் தீ அணையாது,
வெளிச்சம் கொடுக்கும்....நம் ஆயுள் முழுதும்!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 12:31 pm)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே