பல விகற்ப இன்னிசை வெண்பா சார்ந்திருக்க வேண்டுமெனை சாந்துணையும் என்றவளே

Dana Majhi carrying his wife, Amangdei, 42, who died of tuberculosis on Aug.24, 2016 over one his shoulders while their 12-year old daughter, Chaula, walked behind him. Majhi was unable to pay for an ambulance from the hospital in Kalahandi, a district in Odisha, to his village of Melghar.
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
சார்ந்திருக்க வேண்டுமெனை சாந்துணையும் என்றவளே
வாழ்ந்திருப்போம் நூறாண்டு நோயின்றி என்றவளே
ஓர்மகளை ஈன்றெடுத்து கண்ணிமைபோல் காத்திருக்க
தொற்றியதே வந்தொருநாள் நோய்
குணமடைவேன் ஓர்நாளில் என்றவளே சொன்னாலும்
தொற்றியது காசநோய் என்றறிந்து கண்கலங்கி
ஊரெல்லை தாண்டி உளதொருசே வாகேந்
திரத்தில் அவளைசேர்த்தே னே
கையிருந்த சொற்பதனம் கைமாறிப் போனதனால்
கைகட்டி நிற்குமோர்நி லைகண்டு விட்டதனால்
ஈருயிரை காத்திடவே சார்ந்திருந்த தன்னுயிரை
நீத்துவிட்டா ளென்மனை வி
கையிலினி காசில்லை என்றறிந்த ஊழியர்கள்
பாயிலிட்டு கட்டிவைத்த என்னுயிரை தந்திடவே
தோளிலிட்டு கால்நடையாய் சாலையிலே செல்கையிலே
கூடவந்த தென்மக ளே
என்போன்ற ஏழையர்க்கு இங்கில்லை ஓர்வாழ்வு
ஈன்றொரு பெண்ணையும் ஏன்தந்தாள் என்கையில்
தாராதி ருந்திருப்பின் என்னுயிரை நீத்தேனே
இல்லாள் எரிசிதை யில்
20-10-2016