காதல் கவிதை தேடும் அன்பருக்கு கடவுள் கவிதை😋
கரியநிற மேகங்களுள் ,
கண்ணன் சிரித்தான்.
வரிகுதிரையின் வரிகளில்,
சிவநாமம் தரித்தான்.
வர்ணத்தின் ஜாலத்தில்,
பிரம்மன் ரேகை.
அந்நிமாலை வானத்தில்,
இறைவன் லீலை!
நதியில் குளிர்ச்சியல்ல,-அது
நபியின் குளிர்ச்சி!
சூரியன் ஒளிர்வதல்ல-அது
கர்த்தரின் சிருஷ்த்தி!
பூவின் வாசம்-அது
புத்தன் மனம்!
தேனின் சுவை,-அது
தேவியின் மனம்!
சங்கின் ஓசையில்,
சாமி சரணம்!
மரத்தின் ஈரத்தில்,
சிலுவையின் இரத்தம்!
ரோஜா முட்களில்,
புத்தன் போதனை!
வரண்ட நாட்களில்,
நபியின் வரிகள்!
பெயரில் இல்லை.
உன்னில் உள்ளது.
பேதம் இல்லை,-இது
வேதம் சொன்னது!
தூணிலும் கண்டேன்,
துரும்பிலும் கண்டேன்,
வாணிலும் கண்டேன்,
மண்ணிலும் கண்டேன்.
உன்னிலும் கண்டேன்,
என்னிலும் உணர்ந்தேன்!!
.....................இறைவனை!!
-கமலேஷ்