ஓட்டை பானையும் திருட்டு எலியும் தேன் துளி ------படித்த பாடல்கள்

பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா

உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா

ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா

இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.

-- தேன் துளி
படிக்கும் எங்களையும் சிறுவர்களாக்கி, காலத்தி பின் செலுத்தி எங்களை கிராமத்து பள்ளிக்கூடங்களில் நிறுத்துகிறது
பாட்டியின் வீட்டுப் பழம்பானை
அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா
ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா

உள்ளே புகுந்து நெல் தின்று தின்று
வயிர் ( வயிறு)ஊதிப் புடைத்துப் பருத்ததடா
மெல்ல வெளியில் வருவதற்கும் ஓட்டை
மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா

பானையைக் காலை திறந்தவுடன் அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்ததொருபூனை எலியினைக் கண்டதடா அதை
கவ்விப் பிடித்துத் தின்றதடா

என் நினைவில்


குழந்தைகள் பாட்டுமேலே இருக்கற ஆசையாலும், மகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் என்ற ஆசையாலும்
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 'மலரும் உள்ளம்' இரண்டு தொகுதிகளும் 21 வருசத்துக்கு முன்னாலே
சென்னையில் தேடித்தேடி வாங்கினேன்.
பாட்டுச் சொல்லிக் கொடுத்தேனான்னு கேக்கறீங்களா?
புத்தகம் கந்தல்கந்தலா இருக்கு. எல்லாம் நான் படிச்சுக் கிழிச்சதுதான்.:-))))

எழுதியவர் : (21-Oct-16, 3:59 am)
பார்வை : 195

சிறந்த கட்டுரைகள்

மேலே