காலை வணக்கம்

காலை வணக்கம்
====================

துயில் கொண்ட என்
கண்கள், காத்திருந்தன
அவனுக்காக,

இரவு நேர சந்திரன்
வீடு திரும்ப காத்திருந்தான்
அவனுக்காக,

காலை பொழுது
பணித்துளிகள் காத்திருந்தன
அவனை அரவனைக்க,

பூக்கள் பூத்து
வாசம் வீச காத்திருந்தன
அவனுக்காக,

வந்தான் அவன்.....

கண்ணெதிரே நின்றான்
என் துயில் கலைந்தது.

அவன் ஒளி பரவியதால்
மறைந்தான் சந்திரன்...

அவனது கதிர்வீச்சால்
பணித்துளிகள் அவன் வசம் ஆகின...

அவனை கண்ட பூக்கள்
வாசம் வீசி பூத்து குலுங்கின....

அவனால் விடியலும்
பிறந்தது புதிதாய்..

இனிய காலை வணக்கம்..

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:26 pm)
Tanglish : kaalai vaNakkam
பார்வை : 133

மேலே