நான் தனியே
நான் தனியே
==========
அவளிடம் தினம் பேச
என் தூக்கம் விட்டேன்,
ஆனால் அவள் சென்றால்
துயில் கொள்ள
எனை தனியே விட்டு...
அவள் மனம் புரிந்து
எனை மாற்றிக்கொண்டேன்,
ஆனால் அவள் பிரிந்து
சென்றால் மனக்கவலை
என்று எனை தனியே விட்டு...
அவள் குணம் தெரிந்து
நான் என் சொல் தவிர்த்தேன்
ஆனால் அவள் சொல்
எனை நோக சென்றால்
எனை தனியே விட்டு...
மனோஜ்