என் விருப்பம்
என் விருப்பம்
============
நெஞ்சில் என் விருப்பம்
மறைத்து பிறர் ஆசை
நிறைவேற எதிர்பார்த்து
நின்றேன்,
என் மனதில் எனோ
நானாக நானில்லை
பிறர் கதையில் நான்
ஒரு நடிகன் போலும்..
என் ஆசை நான் சொல்ல
அது பிறர் ஆசையிடம்
தோற்று போக, என் ஆசை
அனாதையாக நிற்க,
பிறர் ஆசை என்
நெஞ்சில் முள்
போல குத்த வலி இல்லை
எனக்கு என, எனை
தேற்றிக்கொண்டேன்....
ஒரு முறை எனதாசை நடக்க
நான் ஆசை கொண்டேன்,
என்னிடம் உணக்கானதை
மகிழ்வோடு செய் என்று
சொல்லி, உள் நெஞ்சில்
அவர் வருத்தம் கொண்டார்,
அவர் மனம் அறியும் போது
என் ஆசை நான்
கொன்றேன்...
நான் முடிவு செய்தேன்,
மனதோடு என் ஆசை
இருக்க, வலியோடு
பிறர் விருப்பம் நடக்க,
நான் வாழ்வேன் என்றும்
உன் ஆசைககா.....
மனோஜ்.....