தமிழ்

தமிழ்
======

மழலை பேச்சில்
எழுத்தரியாமல் பேசிய
என் தாய்மொழி,

மொழியோடு நான்
பிறந்தேன்
என் உயிரோட அது
கலந்தது,

உலகெங்கும் பேசும்
மொழிகளில்
தொன்மையான என்றல்லாமல்
தோன்றிய முதல் தோற்காமல்,
நம்மோடு வாழும் மொழி,

உணர்வோடு ஒன்றிப்போன
என் மொழி,
தேன் போல இனிக்கும்
தமிழென்னும் பொழுது,

என் மொழி தமிழ் என்று
நான் பெருமை கொள்வேன்,
எனதுயிராய் என்றும்
செமொழியான
எம்மொழியை வளர்பேன்..

மனோஜ்....

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:29 pm)
Tanglish : thamizh
பார்வை : 209

மேலே