அவள் செவ்விதழ் புன்னகையின் செந்தமிழ் தூரிகை
நான் எழுதுவது கவிதை இல்லை
நினைவுகளின் வானவில் சிதறல்
நெஞ்சின் உணர்வுகளின் சாரல் பொழிவு
நித்தம் பூக்கும் நினைவின் புதுப் புது மலர்கள்
மார்கழிப் பனியில் மௌனமாய் தரையில் விரியும் கோலங்கள்
அந்தி ஆதவனின் செங்கதிர் ஓவியம்
அவள் செவ்விதழ் புன்னகையின் செந்தமிழ் தூரிகை !
----கவின் சாரலன்