ராமன் எவனோ
சீதைக்கு ஒரு ராமன்
கிடைத்தது போல்
இக்கால சீதைக்கு
ராமன் கிடைப்பதில்லை...
அன்பில் பேரழகியான
கற்பில் சீதையென
வாழும் கண்ணியமான
கன்னிக்கு வாய்ப்பதோ
ராவணன்...
வீட்டில் சீதையாய் இல்லத்தரசி
இருக்க வெளியில் தேடுவானே
சூர்பனகியை...
ஒன்றுக்கு மேல் தேடுபவன்
ராமனா? ஒன்றே வாழ்வென
காத்திருந்தானே அவன்
ராவணனா?
அன்பு செலுத்த காதல்
மனைவியாக இருக்க
வேண்டும் என்பது
அவசியமில்லை...
கன்னிக்கு தேவை
கண்ணியமான அன்பு...
அவள் அன்பில் மடியில்
தலை வைக்க வேண்டாமே...
தன் தோளில் அவள்
தலைக்கு இடம்
கொடுக்கலாமே...