காதல்
வாயை கட்டி வயித்தை
கட்டி...
சேமித்த பணத்தில் மனம்
போல் எழுப்பினேன்
ஒரு வீடு...
நந்தி போல் வட்டி
போட்டு நிம்மதி
கெடுத்தான் வங்கி...
சம்பளம் போதாமல்
எழுந்தேன் பொங்கி...
சம்பள உயர்வை
எதிர்பார்த்து வேலை
செய்து தந்தேன் தங்கி...
பணமில்லாமல் வளர்ந்தது
தொந்தி...
எதிர்வீட்டு பெண் அடித்தாள்
எனக்கு காதல் தந்தி...
அவள் பேர் பொன்னி
என் துன்பத்தை கண்டு
கண் துடைத்தாள் கன்னி...
வாழ்க்கை சுமையை பங்கு
போடவே மறந்தேன்
உலகை அவள் அன்பில்...