அதிசய பிறவி

பெண்மையும் மென்மையும்
தனக்குள் கொண்டவள்..
உயிரின் சக்தி அவள்..
தனக்காக வாழமால்
மற்றவர்களுகாக வாழ்பவள்..
தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷ படுத்துபவள்..
அழுகின்ற குழந்தையையும்
சிரிக்க வைப்பவள்..
தன் குடும்பத்தில்
உள்ள அனைவரையும்
அரவனைத்து செல்பவள்..
ஒரு தோழியாய் ஆறுதல் கூறுபவள்..
பூமியை தாங்குவது
போல பொறுமையாய் அனைத்தையும் தாங்குபவள்..
தனகெதிராய் அநியாயம் நடந்தால் கடலென பொங்கிடுவாள்..
தன்னை நேசிபவர்களுகாக
பனியென உருகிடுவாள்..
அம்மா என்ற சொல்லில்
இந்த உலகை ஆள்பவள்..
இவள் சாந்த சொரூபியாயும்
காட்சி அளிப்பாள்..
பத்ர காளியாயும் காட்சி தந்திடுவாள்..
இந்த உலகினையே தன்
அன்பால் ஆள்பவள்..
தியாகத்தின் மறு உருவமாய்
இவள் தான் இருப்பாள்..
இவள் நினைத்தால் அனைத்தையும் ஆக்கிடவும் அழித்திடவும் முடியும்..
கடவுள் படைப்பினில்
இவள் ஓர் அதிசயம்..
தன்னை புரிந்து கொண்டவர்களுக்கு ஆதரவாய் இருப்பாள்..
தன்னை புரியாதவர்களுக்கு
ஓர் புதிராய் இருப்பாள்..
மொத்தத்தில் இந்த உலகினில்
இவள் ஒரு அதிசயபிறவி...

எழுதியவர் : கா. அம்பிகா (21-Oct-16, 9:18 pm)
Tanglish : athisaya piravi
பார்வை : 186

மேலே