நட்புக்கு ஈடேது இவுலகில்
மதுர கவி
மகர யாழ்
முல்லைத் தென்றல்
மெல்லிசை கீதம்
மரகத கற்கள்
மண் வாசனை
மொத்தமும் கொடுக்கும்
மெச்சிடும் சுகங்கள்
முற்றிலுமேனும் ஈடாகாது
முடிவில்லா நட்புக்கு
முப்பொழுதும் குத்தகைக்காரி
முத்திரைத் தோழியுடன்
மலைபோன்ற கவலைகளை
மனம்விட்டு பகிரும்
மகத்தான மணித்துளிகளுக்கு
-g.k