அக்கா உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன்

ஆயிரம் உறவுகள் நமக்கிடையே வந்தாலும்
நமக்கிடையே ஆயிரம்
சோகங்கள்
சண்டை
கண்ணீர்
வலிகள் வந்தாலும்

இந்த பந்தம் மாறாது
இற்றைக்கு மட்டும் அல்ல
என்றைக்கும் சகி.....

அணு அளவு கூட
உன் மேல் நான் வைத்த பாசம் குறையாது
அதிகரித்துக் கொண்டு தான்
இருக்கும்
ஒவ்வொரு நொடியும்.....

உன் மேல் நான் வைத்த பாசம்
என் உயிர் நின்றாலும் மறையாது
தொடர்ந்து கொண்டே இருக்கும்
உன்னோடு
உன் நினைவுகளோடு

உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன்
உன்னுடனே தான் இருப்பேன்
எல்லா சூழ்நிலைகளிலும்....

உன்னை விலகிச் சென்றேன் என்றால்
என் உயிர் நின்றதென்றே அர்த்தம்......

நீ எனக்கு கிடைத்த
மிகப் பெரிய வரம்
என் உயிர் சகி நீ.....
உன்னை என்றைக்கும் விட்டுத் தர மாட்டேன்.....

உன்னோடு நிறைய தலையணை சண்டைகள் போடுவேன்
ஆனால்
என் தலை எப்பொழுதும் சாயப் போவது உன் மடியில் தான்.....

நிறைய தோன்றுகிறது சகி
உணர்வை எழுத்தில் கொண்டு வர இயலவில்லை எனக்கு.....

உன்னை ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் உள்ளது சகி.....
அணைத்து கணக்கில்லாமல்
முத்தங்கள் தந்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது சகி.....
என்னை அறியாமலேயே
நெகிழ்ச்சியில் வரும் கண்ணீரை நீ துடைத்திடுகிறாய் சகி.....
என் சேயே
என் தாயே
என் சகி
உன்னை அள்ளி எடுத்து
என் நெஞ்சில் சுமக்க வேண்டும் சகி.....
என் கர்ப பைக்குள் உன்னை சுமந்திட வேண்டும் சகி.....

சகி நான் ஒன்று நினைத்தேன்.
அது என்னவென்றால்

என் சகியின்
கையை எடுத்து
என் வயிற்றில் வைத்து
என் சேயின்
வருடல்களை
தொட்டு பார்க்க வைக்க
அவள்(என் சகி) பூரித்து மகிழ
என் சேயை வருடும் சேயை பார்த்து உவகை கொள்கிறேன்...

என் சேய்
மாத்திரம் இல்லை
அவள் உன் சேயும் சகி....

என் சேயே
என் சேய்க்குத் தாய்....

எனக்கு இருவருமே ஒன்று தான் சகி......

உன் அன்பு அது மட்டும் போதும் (வேண்டும்) சகி எனக்கு என்றைக்கும்....
வேறு எதுவும் வேண்டவே வேண்டாம் எப்பொழுதும்.
உன் மடியில்
என் உயிரை தந்துவிடுவேன் சகி...
நீ அறியாமலேயே....
வருத்தப் படாதே சகி....
தானாகவே தான்
நானாக இல்லை.....
எப்படியோ உன் மடியில்
உயிர் நின்று விட்டால்
என்னை விட கொடுத்து வைத்தவர்கள்
பிரபஞ்சத்திலேயே யாரும் இல்லை என்பேன் சகி.....

அக்கா
உனை விட்டு எங்கும் போக மாட்டேன்.
உனக்குள்ளே தான் இருக்கிறேன்.
உனை சுற்றியே தான் இருக்கிறேன்....
உனை காண துடித்துக் கொண்டிருக்கிறேன்....
எல்லைகளை உடைத்துக் கொண்டு வந்து சேர்வேன் உயிரே...
உனை பார்த்து அள்ளி அணைத்து மகிழ்வேன்

நம் அன்பிற்கு அழிவே இல்லை...
பிரபஞ்சமே அழிந்தாலும்

~ உன் அக்கா
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 8:15 am)
பார்வை : 1047

மேலே