எழில் பாவை இவள்
பெண்ணே ...!
உன்னை மலரென்று நினைத்துதான்
தேனீக்கள் எல்லாம்
உன்னைச் சுற்றி வலம் வருகிறது...
நீ வெறும் மலரில்லை
எழில் மங்கையென்று
எப்படி நான் இந்த வண்ணத்துப்பூச்சிக்கு
புரிய வைப்பது!
ஓ! புதுமைப்பெண்ணே...
எழுந்து நடந்து வந்து
புரட்சி செய்
நானொரு பூவையல்ல
ஆண்கள் விரும்பும் பாவையென்று...!