நீ நான்
நீ என்னை விட்டு விலகி செல்கிறாய்
ஆனால் நான் உன்னிடம் நெருங்கி வருகிறேன்..
நீ என்னிடம் பேசாமல் போகிறாய்
நான் உன்னிடம் பேசாமல் பேசுகிறேன்..
நீ என்னை பார்த்தும் பார்க்காமல் போகிறாய்..
நான் உன்னை பார்க்காமலே பார்த்து கொண்டிருகிறேன்..
நீ என்னை கண்டால் கோபம் கொள்கிறாய்
நான் உன்னிடம் பொய்யாகவும் கோபம் கொள்ள முடியவில்லை..
நீ என் மீது வெறுப்பாக உள்ளாய்
நான் உன் மீது விருப்பமாக உள்ளேன்..
நீ என் நினைவுகளை மறந்து விட்டாய்
நான் உன் நினைவுகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

