சுழலும் தரைச்சக்கரம் - தீபாவளி -நகைச்சுவை
ரமேஷ் : சுரேஷ் தீபாவளி இன்னும் சில நாட்களிலே
உனக்கு பிடித்த பட்டாசுகள் என்னென்னடா?
சுரேஷ் : நண்பா எனக்கு இந்த காதை பிளக்கும்
பட்டாசுகள் எப்போதுமே பிடிக்காது
எனக்கு பிடித்தவை தரை சக்கரங்கள்
மற்றும் வித வித புஸ் வானங்கள் ....அதுவும்
இந்த விஷ்ணு சக்கரம்( அ) தரை சக்கரம்
என் கருத்தை கவர்ந்தவை
ரமேஷ் : டேய் மச்சி அதுல அப்படி என்னடா
கண்டா கொஞ்சம் சொல்லேன் பார்க்கலாம்
சுரேஷ் : நண்பா இந்த தரை சக்கரம் ஏற்றியவுடன்
ஒரு துள்ளல் பிறகு அதனை வேகமாக
சுழலல், பின்பு பெட்ரோல் இல்லா வண்டி போல்
அப்படியே ஆட்டம் குறைந்து நின்றுவிடும்
ரமேஷ் : இதுல என்னடா இருக்கு
சுரேஷ் : கொஞ்சம் யோசிச்சு பார்
மனிதன் வாழ்க்கை - துள்ளி ஆடுது , இன்னும் ஆடுது
கடைசியில் அந்த தரை சக்கரம் போலவே நின்று
அடங்கிடுது ; ஆடும் அதனைப் பொருட்களும்
அதனையே - வேகமாய் பிரகாசமாய் சுழலும்
சூரியனும் ஒரு நாள் அடங்கி ஒடுங்கி நின்றிடுவான்
இது ஆண்டவன் வகித்த விதி ............
ரமேஷ் : தரை சக்கர சுழற்சியில் இதனை
தத்துவம் கண்டா நீ ஒரு மேதையே !
ரமேஷ் : ஏதோ மனதில் பட்டதவ் சொன்னேன்