இதயத்தைத் தேடி

கண்ணே....!
உன் முகத்தாமரையைப்
பார்த்தால் தான்
என் விழிச் சூரியன்
மலர்கிறான்.

அல்லியனைய
மெல்லியலாள்
உனைக் கண்டால் தான்
என் மனச் சந்திரன்
முழுதாகிறான்.

உன்
வரவுக்காகத்தான்
என் இதயத்து
வாயில்கள் யாவுமே
மூடாதிருக்கின்றன.

எத்தனை பெண்கள்
இருந்தால் எனக்கென்ன?
எனக்கு நீ மட்டும் தான்
பெண்ணாய்த் தெரிகிறாய்!

ஈரத்தை நாடியே
மரத்தின் வேர்கள்.
ஈரமிக்க
உன் இதயத்தைத் தேடியே
என் நினைவு வேர்கள்.

ஈரம்
மரத்திற்குக் கிட்டாவிட்டால்
மரமோ பட்டுவிடும்.

உன் இதயம்
எனக்கு எட்டாவிட்டால்
நானும் ஓர் பட்டமரம்.

எழுதியவர் : சுடரோன் (24-Oct-16, 8:04 pm)
Tanglish : idhayatthaith thedi
பார்வை : 187

மேலே