கனவில் தொலைத்த காதல்

வறண்டபூமிதனை வளைத்துக்கொண்டு கானல்புயல் கடுமையாய்வீச
வெடித்தபருத்தியில் உதிர்ந்த பஞ்சுகளும் சேர்ந்துதனூடே வெகுளியாய் உறவாட...

அவ்வழி இறைதேடிப் பறந்த சிட்டுக்குருவி
கடும்புயலின் சுழலினை மெய்மறந்து புதிராய்காண...

ஆற்றங்கரை ஆலமரத்தடிநின்று அம்புதொடுக்க தயாராய்
அமைதிகாத்து அசையாதிருக்கும் வேட்டுவன் அக்குருவியைக் குறிவைக்க...

புற்றிலிருந்து புறப்பட்ட நாகமொன்று ஊர்ந்துவர
பதறிய வேட்டுவன் தொடைநடுங்கி தொலைவிலோட...

ஆல மரமமர்ந்து அதைக்கண்ட ஆந்தை அலரிய ஓலம்கேட்டு
நாவல் மரமமர்ந்து ஓய்வெடுத்த ஒற்றைவாணரம் எனைநோக்கி துறத்த...

அப்போது நான் எப்படி அங்குச் சென்றேன்...?

கண்டதெல்லாம் கனவாகவே போகட்டும்
வந்தவழியில் எங்குதொலைத்தேன் என்னுள் மக்கிப்போன என்காதலை...??

#கனவு

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (25-Oct-16, 5:30 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 129

மேலே