தெய்வம் தந்த தெய்வம்
ஐயிரெண்டு மாதங்கள்
எனை உன் கருவில் தாங்கி...
வலி தாங்கி ஈன்றாயம்மா..
நீ பட்ட வேதனையை உணர்ந்ததலோ என்னவோ நான் பிறக்கும் போதே அழுதுக்கொண்டே பிறந்தேனம்மா...
தன் வாயிற்றை சுருங்கவைத்து
என் வயிற்றை நிறப்பி வைத்து எனை ஆளாக்கிய தியாகியம்மா நீ..
நான் கல்வி பயில அல்லும்
பகலும் அயராது உழைத்த
உத்தம பிறவி அம்மா நீ....
வாழ்க்கை என்ற ஓடத்திலே....
தந்தை என்ற துடுப்பில்லாமலே
எனை தீங்கின்றி கரைசேர்த்த தெய்வம் நீ தானம்மா...
நான் வளர நீ சிந்திய வியர்வை
துளிகள் இன்று கண்ணீராய்
மாறி என் கண்களில் ஆறாக ஓடுதம்மா.
மாத்து துணி வேறில்லை
ஒத்ததுணி அதுவும் புதுசில்லை
நிலமை புரியாம உனை நச்சரித்து
தீபாவளிக்கு புது துணிகேட்ட
காட்சி இன்னும் என்
கண் முன்னே மறையாம நிக்குதம்மா...
அம்மா... எனை பெத்த தெய்வமே
நீ கண்ட கணவெல்லாம் இன்று
நிஜமானதம்மா...
அதை நீ காண வழியில்லை
இது இறைவன் செய்த லீலையம்மா...
அடுத்து எப்பிறவி வாய்க்குமோ...
எப்பிறவி வாய்த்தாலும்
என்னொட வயித்துல
நீ என் மகளாக பிறக்கனும் அம்மா..
அம்மா எனை பெத்த தெய்வமே
உன் தியாகமும் உழைப்பும் ஈடு
இனண இல்லாததம்மா.