நனைக்காதோ

வானம் பார்த்த
பூமியாய்
உன்னை நோக்கி நான்...

மேகமில்லா
உன் பார்வைகள்
சுட்டதில்...

எஞ்சியிருந்த உயி(நீ)ரும்
வெற்றியதில் - என்
விழியிரண்டில்
மேகமென திரண்டு
கொட்டும்
மழைக்கண்ணீர்
ஈ(நீ)ர(ம)ற்ற உன் வா(ம)னத்தை
நனைக்காதோ

எழுதியவர் : செந்தூரணி (26-Oct-16, 4:07 pm)
பார்வை : 70

மேலே