பெண்

பெண்ணே
வானவில் வண்ணங்கள் தூவும்
வானமே வண்ணங்கள் தூவுகிறதே
உன் வெட்கத்தில் ....
பூக்கள் கொண்ட வண்ணம் போல்
வித விதமாய் வித்தியசமாய்
உன் உடைகள் ....
மெல்லிய காற்று தீண்டியது போல்
நீ வந்து போன பாதை அது
தடயமற்று கிடக்கிறது ....
நதி நீர் அதை உரசி செல்லும்
காற்றை போல் சில்லேன்று
சிதைக்கிறது உன் புன்னகை....
நிலாவில் தண்ணீர் உள்ளதா
தெரியவில்லை ....
இந்த நிலாவை பிரிந்தால்
நிச்சயம் கண்ணீர் உண்டு ....
கவியுடன்,
கிரிஜா.தி