சின்னமலை காத்து சிலு சிலுன்னு வீசுதடி

சின்னமலை காத்து சிலு சிலுன்னு வீசுதடி
தென்னை மரம் ஒன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு ஆடுதடி
சின்னவளே என்னவளே யேன் கறுப்பழகி
ஒன்ன நெனச்சு நெனச்சு இந்த மாமன் மனசு வாடுதடி
என்னத படிக்கையோ ஏதப் படிக்கையோ
படிச்சுப் படிச்சு பெயிலாகி இப்ப கரஸுல படிக்கேன்கிறயே
ஒன்னும் புரியலையே எனக்கு புன்னகை ஜாலக்காரி
சித்திரையும் போயாச்சு தீவாளியும் வந்தாச்சு
சோடியா மத்தாப்பு எப்பக் கொளுத்துதடி மாமன் மவளே ?
படிச்சதெல்லாம் போதுமடி யேன் மத்தாப்புச் சிரிப்புக்காரி
அந்திசாயயிலே ஆத்தோரம் காத்திருக்கேன் வந்து சேரடி
சேர்ந்து உக்காந்து சினிமா பாட்டு படிக்கலாம் வாடி
சின்னமலைக் காத்து சிலு சிலுன்னு வீசுதடி !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-16, 7:53 pm)
பார்வை : 180

மேலே