ஆட்டத்தால்

ஆண்டவன் ஆடிய ஆட்டமிது
ஆடுவர் இவரிதைக் கூட்டமாக,
வேண்டுமிக் கலையெலாம் உளம்சிறக்க
வாழ்வில் என்றும் வளம்பெருக,
தூண்டுத லாகும் உடல்நலத்தில்
துணிவும் வந்திடும் வாழ்வினிலே,
தாண்டிட வேண்டாம் எல்லையதை
தருமே கலையிது நலவாழ்வே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Oct-16, 6:47 pm)
பார்வை : 66

மேலே