தீப திருநாள்

கொண்டாட்டம் தான் ஊரெல்லாம்'
கொண்டாட்டம்தான் இன்பம்
பொங்கும் தீபாவளி கொண்டாட்டம்தான்...

வீடெல்லாம் ஒளியேற்றி
புத்தாடை அணிந்து
கொண்டாடும் தீபாவளி
கொண்டாட்டம்தான்...

புதிய அத்தியாயம் பிறக்கும்
இந்நாளில் கொண்டாடுவோம்
தீப திருநாளை...

கொடிய ஆன்மாவை ஒழித்து
புதிய ஆன்மாவை கொண்டு
வரும் தீப திருநாளை
கொண்டாடுவோம்...

ஆதவன் உதிக்கும் முன்னமே
எழுந்து நல்லெண்ணெய்
இட்டு கொண்டாடுவோம்
தீப திருநாள் கொண்டாட்டம்...

குழந்தைகள் புத்தாடை உடுத்தி
ஆரவாரம் செய்து மத்தாப்பு
கொளுத்தி கொண்டாடுவோம்
இன்ப தீபாவளி
கொண்டாட்டம்...

இன்பம் பொங்கும் இன்ப
தீபாவளி கொண்டாட்டம்
கொண்டாடுவோம் வாழ்வின்
துன்பங்கள் நீங்க
கொண்டாடுவோம்...

ஒவ்வொரு வருஷம்
ஐப்பசி திங்களில்
வருவானே உலக
இந்துக்கள் கொண்டாட...

இன்பங்கள் பெருகிட
துன்பங்கள் பொசுங்கிட
மகிழ்வோடு தீபாவளி
திருநாளை கொண்டாடுவோம்...

அமாவாசையில் வரும்
தீபாவளி செய்திடுமே
வாழ்வில் பௌர்ணமி...

எழுதியவர் : பவநி (28-Oct-16, 10:28 am)
Tanglish : theepa thirunaal
பார்வை : 53

மேலே