கோலா மயில் வாராயோ
பாடும் குயில் நானிருக்க ......
ஆடும் மயில் நீயிருக்க
நேரில் வந்து நடைபயில
நீலக்குயில் வாராயோ ?
நெஞ்சமெனும் கூட்டினிலே
தஞ்சம்புக வந்தவளே ....
வஞ்சியவள் வந்துவிட
ஆதியிலே படுகிறேன்
ஆசை அனல் மூட்டுதடி
தேகம் அதில் வாடுதடி
ஓசையுடன் ஒருமனசு
உன்னை தினம் பாடுதடி
பக்கத்திலே நீயிருக்க
பாவத்தினம் பூத்திருக்க
கொஞ்சித்தினம் கதை பேச
கோலமயில் வாராயோ ?