காதல்
உன் கண்கள் பார்த்து
உன்னோடு வாழ என் வாழ்வும்
தவம் இருக்கிறதே ....
உன் மடி சாய்ந்து
கதை பேசி நேரம் போக
என் நாட்கள் தான் ஏங்குதே....
உன் வண்ணம் போலே
தான் பூக்க வேண்டும்
என் வீட்டு பூக்கள் கேட்குதே...
நீ வீசும் பார்வை
என் மேலே பட்டு
எந்தன் நாட்கள் தீர ஆசை தள்ளாடுதே....
நான்கு திசை தேடி
உனக்காக வந்தேனே....
உந்தன் பாதை வந்து
உனை கண்டு கொண்டேனே...
வானவில்லை எடுத்து
சேலை நெய்து தருவேனே....
இந்த வெண்பூக்கள் தான்
உந்தன் கண்ணிலே வந்து பூக்கவே கொஞ்சம் கேட்குதே....
இன்று உன் கையிலே
நான் காத்தாடியே
உந்தன் திசை தேடியே நான் ஆடுவேன் ...
பெண்ணே பெண்ணே
என் பெண்ணே பெண்ணே
என்னை கண்டால் என்ன
காதல் சொன்னால் என்ன....