தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

தீபம் + ஆவளி @ தீபாவளி - ஆம்,
தமக்குள் நிறைந்திருக்கும்
மாய இருள்தனைப் போக்க
அறிவுத்தீயை தீட்டி
வரிசை வரிசையாய் அகல் ஒளி ஏற்றி
வெளிச்சத்தை மூட்டி
நமக்குள் மறைந்திருக்கும்
தீய எண்ணங்களை
சாதி மத பேதம் துறந்து
பொறாமை கோபம் போன்ற
அழுக்குகளை இன்றோடு அகற்ற
நல்ல எண்ணெய் தேய்த்து குளித்து
மன மாற்றம் பெற்றிட
புத்தாடைகள் வாங்கி அணிந்து
புத்துணர்வோடு வெளிவந்து
ஒருவரோடு ஒருவர் பேசி
உணர்ந்து புரிந்து
அனைவரும் சமமாய் இணைந்து
இனிப்புகளைப் பகிர்ந்துண்டு
விட்டுக்கொடுத்து கொண்டாடி மகிழ்வோம்
இவ்வாண்டிலிருந்து... !

அனைவருக்கும் என் இனிய
தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்.

இவண்
கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Oct-16, 8:18 pm)
பார்வை : 478

சிறந்த கவிதைகள்

மேலே