பூவும் அவளும்

அன்பே
உன் கூந்தலில்
குவளையின் வாசம் உணர்ந்தேன்

உன் முகபாவனையில் ஆம்பலின்
அசைவுகளை கண்டேன்

உன் நாணத்தில்
அனிச்சம் பூவின் சாயல் கண்டேன்

உன் விரலின் அமைப்பில் காந்தளின்
வடிவம் கண்டேன்....
நீ நடக்கும் போது செம்மல் உதிர கண்டேன்...

அன்பே...
நீ என் காதலை ஏற்க குறிஞ்சி பூக்கும்
காலம் வரை காத்திருப்பேன்...

எழுதியவர் : செல்வமுத்து.M (29-Oct-16, 5:07 am)
Tanglish : poovum avalum
பார்வை : 796

மேலே