உதிரத்தில் எரியும் காதல்

அடையாளம் ஏதுமற்று
என் உதிர நதியெங்கும்
எரிகிறது உன் பெயர்.

என் மொழியின்
நானறியாச் சொற்களிலிருந்தும்
உயிர்க்கிறது உன் நினைவு.

காதல்...
மழலையாய் விளைவித்த
பல் தெரியாப் புன்னகையில்
இரவின் கனவு தாண்டிக்
கேட்கிறது என் தாபம்.

மோகம் தணித்து
நீரில் இறங்கி
நிலவை அள்ளிய கைகளில்
தெரிகிறது உன் முகம்.

நொடி நீண்டு யுகங்களாகி
ஒரு கணத்தில்
யுகம் உருகி நொடியாக .....

என் கண்ணுக்குள் கலங்கும்
நம் காதல்.

எழுதியவர் : rameshalam (29-Oct-16, 11:15 am)
பார்வை : 90

மேலே