காவேரியே நீ எங்கே -நாகூர் லெத்தீப்

ஆற்றுக்குள்
புது வெள்ளம்
வரவேற்பது
தமிழர்களின் சிறப்பு...!

காவேரி
படுகை
தண்ணீர்
வரத்து வரவு
இல்லை
தடைகள் யாராலே....!

ஆற்றை
தூர்வாரி
தண்ணீர்
வரும் முன்னே
வரவேற்கும்
விவசாயிகளுக்கு
கண்ணீர்
மட்டுமே மிச்சம்...!

காவேரி
பெண்ணே
உனது வருகை
விமர்ச்சியாக
கொண்டாடும் நாள்
வெகு தொலைவில்
சென்றதேன்
எங்களுக்கு.....!!

தமிழர்களின்
பொறுமை
விலைபேசுகிறது
விலையற்ற
விவசாயம்
நசுக்கப்படுகிறது
ஈனப்பிறவிகளால்....!!

புது வெள்ளம்
கரைபுரள பூக்களை
சொரிந்து வருக வருக
வென்போர்
தமிழ் மரபு
காவேரியின்
தனிச்சிறப்பு
அதுவென்றோ...!!

வீட்டிலே
அன்னம்
செல்வம் பெருகும்
காவேரி
தாயின்
வருகையால்...!!

ஏனோ
தடைப்பட்டது
தமிழர்களின்
வாழ்வில்
சோதனை
ஆறுகளாலாக
கரைப்பூண்டது...!!

விலையற்ற
இயற்க்கை
விலை பேசிய
நாள் முதல்
தடுமாறியது விவசாயம்
தடம்புரண்ட
காவேரியினால்....!!

இடை
இடையே
தடைபட்டாலும்
குழந்தையின்
தடுமாற்ற
நடைபோல்
தவழ்ந்து வரும் காவேரி
உனக்கு தடை
போட்டது பரிதாபமே
விவசாயத்திற்கும்
விரோதமே...!!

எழுதியவர் : லெத்தீப் (29-Oct-16, 11:50 am)
பார்வை : 55

மேலே