காத்திருப்பு
ஓவ்வொரு நொடியும்
உன்னை நினைத்து
அகமும் புறமும்
உருகி நின்று
எப்போதாவது
என்றில்லாமல்
தினமும் இப்படித்தான்
இருப்பிடம் வேறாக
எண்ணங்கள் ஒன்றாக
ஏங்கி நிற்கின்றேன்
உண்மை புரியாமல்
எதிர்காலத்தில்
ஏதாவது நடந்து
நான் உன்னை சேர
அன்றும் இப்படித்தான்
நிற்பேனோ உன்னை
கண்ட மகிழ்ச்சியில்
ஒன்றும் புரியாமல்
உருகி நிற்பேனோ