பெண் வாசனை
ஒரே படபடப்பாக இருந்தது அவனுக்கு.ஏசி ஓட்டல் ரூமிலும் வியர்த்து வழிந்தான்.மே மாதம் ஸ்கூல் லீவ் விட்டதால்,குழந்தை வினுவுடன் மனைவி லக்ஷ்மி அம்மா ஊருக்கு போனதன் விளைவு இது.பத்து நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல்,ஆபிஸ் ஃப்ரண்டு ஆகாஷுடன் பலான படம் பார்த்துவிட்டு உடம்பு ஒருமாதிரி சூடாக,அவனின் ஐடியாவால் இந்த ஓட்டல் ரூமுக்கு வந்துவிட்டான்.குடி,சிகரெட்டு எந்த்ப் பழக்கமும் இல்லாதவன் இப்படி திடிரென சறுக்கியது அவனுக்கே அசிங்கமாக இருந்தது.
காஸ்ட்லி ஓட்டல்,ஒரு நைட் பேமண்ட் பத்தயிரம்.ஓட்டல் பில் கூட அட்வான்ஸாகவே கொடுத்தாகிவிட்டது."ரெய்டு"பிரச்சனையெல்லாம் இல்லை.
"டக்கென" ரூம் திறந்தது.அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்திவிட்டு நேராக அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்."ஹாய்"என்று சொன்னபடியே அவன் தோளில் கைப்போட்டாள்.
"குப்பென"அவளிடமிருந்து வந்த வாசனை அவள் குடித்திருக்கிறாள் என உணர்த்தியது.
அவனுக்கு இது புதிது,ஆபிஸில் கூட அவன் பெண்களிடம் இவ்வுளவு நெருக்கமாக பழகியத்தில்லை.அம்மாவின் ஸ்பரிசத்திற்குப் பிறகு மனைவி லக்ஷ்மியின் ஸ்பரிசம்தான் அவனுக்குப் பழகிய வாசனை.
லக்ஷ்மிக்கு களையான முகம்,எப்போதும் மஞ்சள் மிளிரும் முகத்துடன் நெற்றியில்,நெற்றி வகிட்டில் குங்குமப் பொட்டுப் பளபளக்க சிரித்த முகத்துடன் அவனை ஆட்கொண்டவள்.
"என்ன சார்,என்னை பக்கத்துல வெச்சுகிட்டு யோசனை?நான் ஒன் அவர்தான் உங்களுக்கு அவைலபிள்"என்றாள் வந்தவள்.
உதட்டு லிப்ஸ்டிகும்,முகப் பவுடரும்,செண்ட் வாசனையும்,விஸ்கியின் வாசனையும் அவனை என்னவோ செய்த்தது.
ஒவ்வொரு இரவும் லக்ஷ்மி அவனுடன் இருக்கும்போது அவள் தாலிக் கயிற்றிலும்,முகத்திலும் பூசிய மஞ்சள் தூளிலிருந்து வரும் வாசனையும்,மீனாட்ச்சி அம்மன் குங்கும வாசனையும்,அவனை கிறங்க அடிக்கும்.தலையில் அவள் பூவே வைத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த வாசனையிலேயே அவன் கிறங்கிப் போவான்.
ஆனால் இதோ இவளிடமிருந்து வரும் இந்த வாசனை செயற்க்கையாய்,சிறிது நிமிடங்களிலேயே வயிற்றுக்குள்,ஒரு அமிலத்தை,ஒரு பிரட்டலை உற்ப்பத்தி செய்வதாய் இருந்தது."டக்"கென எழுந்து வாஷ்பேசினுக்குஸ் சென்று முகம் கழுவி,வாயைக் கொப்பளித்து,சுத்தம் செய்தவன் தன் தவறை உணர்ந்தவனாய் ஒன்றுமே பேசாமல் அவளிடம் சில நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டிவிட்டு ரூமைவிட்டு வேளியேறினான்.
"உண்மையான பெண்வாசனை மனைவியின் அணைப்பில்தான்"என்று உணர்ந்தவனாய் லக்ஷ்மிக்காக காத்திருக்க முடிவுசெய்தான்.