மனதில் நின்ற மாமனிதர்

மனதில் நின்ற மாமனிதர்
* * *~~~*~~~* * *

ஆங்காங்கே ஒடுங்கிய
இய்ய பாத்திரம் போன்ற
இந்த சோஷலிச சொர்க்கத்தில்
விதவிதமாய் அலறல் சத்தங்களும்
அவ்வப்போது சில ஓல ஒலிகளும்
கேட்டுக்கொண்டே இருக்கின்ற பகுதி

அழுத்தும் பாரம் எண்ணி
இறக்கி வைக்க திணறிக்கொண்டே
அதிவேகமாய் ஓடும் வாகனகளுகென்றே
வரம் வாங்கிவந்த சாலையின் பக்கம்
தன் கையை நீட்டியதற்காய்
தண்டனை பெற்று தன்
கரங்களில் ஒன்றை இழந்த புளியமரம்

புளியமரத்தின் நிழலுக்காகவே அது
நீண்ட நாள் வாழவேண்டும் என
மனதால் வேண்டிக்கொண்டு
பழைய காலணிகளை அழகுற
அணிவகுக்க செய்து அமர்ந்திருக்கும்

வெளுத்த முடியுடன் அதைவிட நிறம்
பழுத்த உடையணிந்த மனிதரின்
பக்கத்தில் தன் வாலை ஆட்டியவாறே
விசுவாசத்தை காட்டிகொண்டிருந்த ஜீவன்

கவிதைக்கு கரு உதிக்காமல்
மதி மலடாகிப்போனதால்
கைபேசி நுழைந்து
கவிதையில் தொலைந்து
கைவிரல் அயர்ந்ததால் என்
கண் பார்வை மேலுயர்ந்தபோது

சாலையில் எழும் கானல்நீரை
கவ்விவர நினைத்து
இடைவந்த இருசக்கர பிரியர்களை
சில நேரம் தள்ளி காயம் செய்த
பாவத்தை தொலைக்க
அதேஇடத்தில் பெரிய வாகனத்தில் சிக்கி
சிதைந்த உடலுடன் தன்
முன்னங்கால்களால் நகர முயன்று
முடியாமல் போகவே
அதே இடத்தில் படுத்து
அஜ்ஜீவன் ஆவி பிரித்த பொது

காக்கி கால்சட்டையணிந்து
கம்பீர கட்டுடல் இருந்தும்
காற்றில் வரும் கடுஞ்சொல் முற்களின்
காயத்தை அதிகரிக்க நினையாமல்
தன்தலை தாழ்த்தி நடக்க கற்றுக்கொண்டு

அஜ்ஜீவனுக்கு சொந்தமானவரின்
கண்ணீரை மட்டுமே
காணிக்கையாய் பெற்றுக்கொண்டு
அஜ்ஜீவனின் உடலை
அள்ளி அப்புரபடுத்திய அம்மனிதர்
என் மனதில் நின்ற
என் மனதை வென்ற மாமனிதர்
__________~~*~~_____________

கே.செந்தில்குமார்

எழுதியவர் : கே.செந்தில்குமார் (31-Oct-16, 4:10 am)
பார்வை : 178

மேலே