ஒலிம்பிக்

உடற்பயிற்சி
வகுப்புகளைக்
கடன் வாங்கி
கணக்கு அறிவியல்
பாடங்கள் பள்ளிகளில்
நடத்தப் படுவதினாலும்...

பாடங்கள்...
திறமைகளின் தேடல்களாய்
இல்லாமல்
நேரக்கொல்லிகள் ஆனதாலும்...

தேர்வுகள்...
இலக்குகளின்
கலங்கரைவிளக்கமாய்
இல்லாமல்...
மதிப்பெண் வேட்டையாய்
மாறிப் போனதாலும்தான்

இந்திய தேசத்திற்கு
அதிக தங்கம்
விலகிப் போனது
ஒலிம்பிக் போட்டிகளில்...

விளையாட்டுக்களின்
பரவல்களில்
பாடங்களின்
கால அட்டவணைகள்
அமையட்டும்...

விளையாட்டு வீரர்கள்
அடையாளங் காணப்பட்டு
பள்ளிப் பருவத்திலிருந்தே
அரசாங்கத்தின்
தத்துப் பிள்ளைகளாய்
உலகத்தர வசதிகளுடன்
வளர வேண்டும்...

வீரர்கள் எல்லாம்
சக்தியின் சிகரம் தொட
உணவு முறைகள்
ஆராய்ச்சியினால்
மேம்படுத்தப்படல் வேண்டும்..

விளையாட்டு வீரர்களின்
நெருக்கடிகள் கண்டறியப்பட்டு
நெருக்கடிகளுக்கு
நெருக்கடி தரவேண்டும்...

அப்போது விளையாட்டோடு
கல்வியும் வசப்படும்
மாணவர்களிடம்...

இந்தியாவிற்கு இனி...
தங்கங்கள் கோலார்
சுரங்கங்களில் மட்டுமன்றி
ஒலிம்பிக் போட்டிகளிலும்
விளையும்...
👍😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (31-Oct-16, 2:54 pm)
பார்வை : 2377

மேலே