துன்பமும் அண்டிடுமோ சொல்

கருணை விழிகளால் காக்கும்சாய் நாத
னருளால் கிடைக்கும் அமைதி !- பெருகிடும்
அன்பா லுருகி அவன்தாள் பணிந்திடில்
துன்பமும் அண்டிடுமோ சொல்.

விழிகளும் பேச விளைந்திடு மின்பம்
பொழியும் மழையாய்ப் பொலிவாய் !- வழிக்குத்
துணையாகக் கூடவே சொந்தமென வந்தே
அணைத்திடும் பாபா அழகு.

பேச மறந்து பெருகிடும் ஆவலால்
நேச முடனே நினைத்திடு! - வாசமலர்
தூவி வழிபடு, தூக்கம் விரைந்தோடத்
தாவியவன் பாதம் தழுவு.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Oct-16, 11:35 pm)
பார்வை : 117

மேலே