உன்னுருவம் காணவேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னுருவம் காணவே
என்னுயிரும்
தவிக்குது......
புன்னகைக்கும்
பூவே......என்வசந்தம்
என்பது
உன்வரவு தானே......!!
கண்ணுறங்கி
நாளாச்சு......
களவுபோனது
கனவுகளும்.....
நினைவு மறந்து
போனதில்லை....
நிறம்மாறாத
பூக்கள் போல.....
என்நினைவில்
என்றும்
நீ......!!!