விவாகரத்து

குடும்ப நீதிமன்ற

வளாகத்தில்

கூட்டமாகதான்

இருந்தது...

அங்குவந்திருந்த

ஒருவன்

தன் காலில்

அறுந்துபோன

ஒற்றை செருப்பை

தைக்க பிடிக்காமல்

ஜோடியில்

அறுந்த

ஒன்றை விட்டுவிட்டு

ஒன்றுடன் மட்டும்

நடக்க முடியாமலும்

காலணிகளை மட்டும்

"ஜோடியாகவே"

விட்டுச்சென்றான்...

"மணமுறிவு"

வேண்டுமென்று

வந்திருந்தவன்....!

எழுதியவர் : நிலாரவி (1-Nov-16, 9:12 pm)
Tanglish : vivaagaraththu
பார்வை : 169

மேலே