மழையும் சாரலும்
மேகம் 'கூடுதுன்னா'
மழை வரப்போகுது?
மேகம் 'கலையுதுன்னா'
மழை வராமப்போகுது?
கூடுவதெல்லாம் நல்லதுக்கு,
பிரியரெதெல்லாம்?
காத்தடிச்சா மேகம் கூடும்
காத்தடிச்சா மேகம் கலையும்,
காத்துக்கு நல்லதும் தெரியும்,
கெட்டதும் தெரியும்.?
மழை "பேயுது"ன்னா,
தூறல் "பிசாசுதா"?
தூறல் சாரலாகி
புயலாகி வெள்ளமாக
மழைக்கு பணித்தது யார்?
பெய்யெனப்பெய்யும்
மழையை பேயெனப்பணித்தது யார்?
புயலில் பலிகொள்ள பிசாசாக்கியதும் யார்?
யார், யார், யார்ரோ?