எண்ணங்கள் திட்டங்கள் முடிவுகள்

உறங்கிய நெஞ்சங்கள்
உலகை உணரும் நேரம்...
உறங்காத சூரியன்
ஒளிதரும் விடியற்காலம்...

கலங்கிய நெஞ்சங்களும்
கனிவு பெறும்...
கலங்காத உள்ளங்கள்
எழுச்சி கொள்ளும்...

காலைத்தென்றல் தரும்
புத்துணர்வில்
எண்ணங்கள் திட்டங்கள்
வரையறுக்கப்படும்...

எண்ணங்கள் திட்டங்கள்
வரையறுக்கப்படும்போது
முடிவுகள் இலக்குகளுக்கு
கூட்டிச் செல்லும்...

மனமே செய்வன
திருந்தச் செய்...
நீ குடி கொள்ளும்
மனிதம் மகிழச்செய்...

துணிவுகளின் தோழமையில்
விவேகங்களின் நந்தவனத்தில்
நாளெல்லாம் நம் வசப்படும்...
பொழுதுகள் நினைவுப்
பூங்கொத்து கொடுத்துப் போகும்...

கனிவான இனிய
காலை வணக்கம்!
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀👍🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (2-Nov-16, 6:54 am)
பார்வை : 193

மேலே