பல விகற்ப பஃறொடை வெண்பா இளம்வயதில் வெய்யிலில் வீதியில் ஓர்நாள்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
இளம்வயதில் வெய்யிலில் வீதியில் ஓர்நாள்
களமிறங்கி மட்டைப்பந் தாடஎன் கண்ணிரண்டும்
வானுயர்ந்த பந்தொன்றின் மீதே நிலைத்திருக்க
எங்கிருந்தோ வந்தொரு பெண்மீது மோத
பிடிக்க நினைத்ததோர் பூம்பந்தும் ஐயகோ
அங்கு பறிபோன தே
02-11-2016