பஞ்சமில்லா அழகு

ஆக்ரோஷமா பாக்காத
ஆவியாகி போவேண்டி!
அணைத்துவிட நினைக்காத
சாம்பாலாக ஆவேண்டி!

அருகில்மட்டும் வராத
அவிஞ்சுபோய் நிப்பேண்டி!
கண்ணசைவில் பேசாத
அய்யய்யோ முடியலடி!

சேலையில வந்துடாத
சருகாக ஆயிருவேன்!
சல்வாரில் வந்துபுட்டா
சரிஞ்சே விழுந்துடுவேன்!

கையகிய்ய வச்சுடாத
எரிஞ்சுபோய் கரிஞ்சுடுவேன்!
பேசும்போது சிரிச்சுடாத
எனக்குள்ளே இறந்துடுவேன்!

புருவத்த தூக்கிபுட்ட
புழுதிமண்ணு மணக்குதடி!
புவியோட அழகெல்லா
பொழுதுபோக்கா தெரியுதடி!

எத்தனையோ அழகிக
திமிருபோட்டு திரியுது!
உன்போல அழகில்ல
திட்டவட்டமா தெரியுது!

இயற்கைய மிஞ்சுவது
உன்னழகுதான் பொன்னே!
இனிமேலு இயற்கைக்கு
அழகுகூட்ட வாகண்ணே!

எழுதியவர் : (2-Nov-16, 6:51 pm)
பார்வை : 86

மேலே