பொய்யாப் புலவனே

பொய்யாப் புலவனே
தமிழுக்கு மூச்சுக் கொடுத்த மூத்தவனே!
தமிழன் என்ற பெருமையை எம்மொடு சேர்த்தவனே!
இரண்டடிக் குறளால் இவ்வுலகை புரட்டியவனே!
தமிழ்தாய் பெற்ற புண்ணியனே!
மாதங்கள் இல்லை ; வருடங்கள் இல்லை ;
யுகங்கள் கழிந்தலும் சரி
வள்ளுவனின் குறள்
என்றும் தமிழனின் குரல்!