கா த லன்

கா(த)லன்...

நீயென் காதலனாய்
என்னை மணந்து கொள்ளும் கணவனாய்
என் கற்பை போற்றிக் காப்பாற்றும் காவலனாய்
என் வாழ்வில் நீண்ட பயணத்திற்கு
உற்றதுணையாய் நீ வருவாய் என நினைத்தேன்

ஆனால் இப்படி
என்னுயிரை பறிக்கும்
காலனாய் மாறுவாய் என்று
இத்தருணம்வரை எதிர்பார்க்கவில்லை....!

உன்னை நம்பியதற்கு
தேவைதான்
இத்தண்டனை...!

எழுதியவர் : கிச்சாபாரதி (3-Nov-16, 8:30 pm)
பார்வை : 122

மேலே