கடவைகள்

இன்றைய
நாளைப் போல
துரதிர்ஷ்டமான
இல்லை
அதிர்ஷ்டம்
குறைந்த
நாட்களை
சந்திக்கும் போதெல்லாம்
நான் உன்னையே
நினைவு கூர்கிறேன்
சாலை நீண்ட
இந்த
பஸ் பயணங்களிலும்
எனை கடந்து போகும்
காதல் ஜோடிகளிலும்
இந்த நாவல் முழுக்க
பின்னிக் கிடக்கும்
ஹீரோயிஸத்திலும்
நீயே இருப்பதாய்
உணர்கிறேன்
இங்கு எதுவும்
புதிதாக இல்லை
சபாஷ் போட்டு
ரசிக்குமளவு
நட்புக் கூட
நெருக்கமாயில்லை
இப்போதெல்லாம்
அறிமுக புன்னகைகளில் கூட விகல்பமிருப்பதாய் தான்
உணர்கிறேன்
யாரையும்
நிமிர்ந்து பார்க்கக்கூட பிடிக்கிறதாயில்லை
என் உலகத்துக்குள்
புதிதாய் பிரவேசிப்பவர்களிலும் நாட்டமில்லை
எனக்குத் தெரியும்
என் சந்தோஷமானது
ஒரு பெட்டியுள்
புதைக்கப்பட்டு
உன்னைப் போலவே
தூரத்திற்கு
வீசி எறியப் பட்டிருக்கலாம்
ஆனால் அது இன்னும்
இறந்து விடவில்லை
அறையப்பட்ட ஆணிகளின் விடுதலையையே
ரட்சிக்கிறது அது
ஒரு நீண்ட தேடலின் முடிவு
என்னவாக இருக்கும்
சந்தோஷம் என்று மட்டும்
பொய் சொல்ல முடியாது
சாத்தான் பாதி
தேவன் மீதி என
நானும்
உன்னைப் போலவே
நம்புகிறேன்
ஒன்று மட்டும் உண்மை
வயது வந்தபின்
யாரும் குழந்தையில்லை
மேலும்
குழந்தை போல நடிப்பதில்
எனக்கு
உடன்பாடுமில்லை...

எழுதியவர் : Shafiya (3-Nov-16, 8:37 pm)
பார்வை : 55

மேலே