அற்புதமான உறவு
காந்தத்திற்கும் இரும்பிற்கும்
அப்படியென்ன தொடர்வு...?
கரும்புக்கும் எறும்புக்கும்
என்ன உறவு?
இரவுக்கும் நிலவிற்கும்
அப்படியென்ன உறவு...?
தேனீக்கும் மலருக்கும்
என்ன உறவு?
நீருக்கும் நிலத்திற்கும்
அப்படியென்ன உறவு?
பஞ்சுக்கும் நெருப்புக்கும்
என்ன உறவு?
மல்லிக்கும் தென்றலுக்கும்
அப்படியென்ன உறவு?
நிழலுக்கும் நிஜத்திற்கும்
அப்படியென்ன தொடர்வு?
காட்சிக்கும் கண்களுக்கும்
என்ன உறவு?
கவிதைக்கும் காதலுக்கும்
அப்படியென்ன தொடர்வு?
உடலுக்கும் உயிருக்கும்
என்ன உறவு?
உனக்கும் எனக்கும் இடையில்
ஏன் இருக்கக்கூடாது
அற்புதமான காதல் உறவு?
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பு மட்டும் இல்லையென்றால்...
வாழ்க்கைக்கு ஏது அழகு?!