பெண்ணியம்
உயர்ந்தவர்,
முதலாளித்துவம்,
சோசலிஷம்,
பற்றி பேசிய வரலாறெல்லாம்
பேச மறந்த ஓர் உயிருள்ள ஜடம் பெண்ணினம்
பிறந்தாள்,
வளர்ந்தாள்,
பூப்பெய்தாள்,
மணமுடித்தாள்,
ஆயிரம் ஆசைகள் அவளுள்.
ஆசைகள் பற்றி நான் பேசவில்லை. .
ஓர் வேதனை. .
ஓர் ஆடவன் சிந்திக்கும் மங்கையின் வேதனை
சிந்தனை எத்துனையளவு
என்னெஞ்சில் போராடி இருந்தால்
இத்தனையளவு வேதனைச் சொல் வெளிப்படும். .
கேள் சகோதரா. . . .
பிறந்தாள் ,
பெண்ணென்று புதைத்தது ஓரினம்.
வளர்ந்தாள் - இவள்
வளர்தால்
தொல்லையென
கழுத்தை நெரித்து கொன்றதோர் இனம். . .
பள்ளி சென்றாள்
காம வெறி கொண்டு
நாய் கொண்ட வாள் போல சுற்றியது இன்னுமோரினம்.
கருத்தறித்த மங்கையையும்
கற்பழித்து
கழுத்தறுத்த கொன்டதோர்
கருணையற்ற
காம வெறி கொண்டோரினம்
வேலைத்தேடி வெளிக்கிளம்பினால்.
வேதனை. .
பாவம். . .
அடுத்தநாள்
பத்திரிகை தலைப்பு செய்தியானால். . .
செயற்கை கொடுத்த துன்பம் ஓர்புறமிருக்க. .
இயற்கை கொடுத்தது இன்பம் கலந்த துன்பங்கள் சில. .
மாதமொன்று
மாதமானால் ஒன்று
மாதங்கள் பத்து முடிந்தால்
மற்றுமொன்று.
மாறாத துன்பங்களிது. . .
பாவம் அவள். . .
மானிடம் போற்ற வேண்டியவள்.
ஆணினம் கொள்ளாத தாய்மையென்னி
ஆணவம் கொள்ள வேண்டியவள். .
அன்பானவள்,
அழகானவள்,
அமைதியானவள். . .
கங்கையளவு கொண்ட
மங்கையாசைகள்
ஓரிரு
நங்கை பாசம் அறியாத
ஆடவனினாலும்
ஏன்
பெண்ணினத்தாலும்
கொள்ளையடிக்கப்படுகிறது. . .
பெண்ணினம் பற்றியே பேசும் என்னை
தயவு செய்து ஆணாதிக்கவாதி யென என்னிட வேண்டாம். .
நன்றி