டாக்டர் நானும் டாக்டர்தான் சிரிப்போடுசிந்தனை

பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,
"டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்... நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்.. நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.
சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்.