ஆல்ப்ஸ் தேன் நிலவு

ஆல்ப்ஸ் பனிமலை பார்
அழகிய ஆப்பிள் கன்னக்காரி
பனியும் உன் அழகில் உருகுதடி
நதியாய் ஓடுமடி ---இனி
தேன்நிலவுப் படகு விடுவோம் நாம் !

உருகிய பனி மீண்டும் உறைந்து விட்டால் ....?

ஸ்கேட்டிங்கில் சறுகிச் செல்லலாம்

ஸ்கேட்டிங் பலகை உடைந்து விட்டால் ......?

கவலை கொள்ளாதே
சினிமா கதா நாயன் போல் காதல் கரங்களில்உன்னை ஏந்தி ஹோட்டல் வரை நடந்தே செல்வேன் !

ஐ லவ்யூடா கண்ணா !
(தவறி கீழே போட்டுவிடாதே ஸ்டெச்சருக்கு போன்
செய்ய வேண்டி வரும் )

NO ஹாஸ்ப்பிட்டலுக்கும் காதல் கரங்களிலே உன்னை
எடுத்துச் செல்வேன்

ஹாஸ்பிடலிலுருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் ...?

ஆல்ப்ஸ் பனி மலை

நோ நோ நெவெர் !

பின் சஹாரா பாலை வனத்திலா ஹனிமூன்
கொண்டாடுவார்கள் ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-16, 10:32 am)
பார்வை : 154

மேலே